வெள்ளி, செப்டம்பர் 07, 2012

கோப்பாயில் 500பரப்பு காணியை இராணுவத்தினருக்கு தாரைவார்த்த ஈ.பி.டி.பி அதிகாரம்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த 333பரப்பு காணி உட்பட கோப்பாய் பிரதேசத்தில் 550பரப்பு காணியை படையினர் முகாம் அமைப்பதற்கு கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் தலைமையில் நடைபெற்றபோது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த 333.09 பரப்புக் காணியை 51ஆவது படைத் தலைமையகம் அமைப்பதற்கும், பன்னாலை பகுதியிலுள்ள 36 பரப்பு அரச காணியை இராணுவ முகாம் அமைப்பதற்கும், தம்பாலையில் 179பரப்புக் காணியை இராணுவத்தினரின் தேவைக்கும் இராணுவத்தினர் கோரியுள்ளனர் என பிரதேச செயலாளர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்தார். இதனை படையினருக்கு வழங்க அனுமதி வழங்குவதாக அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரிரி அலென்ரின் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.