வெள்ளி, செப்டம்பர் 07, 2012
தமிழகத்தில் இலங்கை யாத்திரிகர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நேற்று கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர்.
தாக்குதல் களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நேற்று நண்பகல் புறக்கோட்டையிலுள்ள சகல தமிழ் வர்த்தக நிலையங்களும் இழுத்து மூடப்பட்டிருந்தன.
பகல் 1.30க்கு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு முன்னால் காலி முகத் திடலில் ஆயிரக்கணக்கான தமிழ் சமூகத்தினர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்தனர்.
நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இதனால், காலி வீதியில் முற்றாக வாகன போக்குவரத்துகள் தடைப்பட்டிருந்தன. பேரணி காலிமுகத்திடல் சந்தியை அண்மித்த போது பொலிஸார் வீதித் தடைகளை போட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறிச் செல்லாதவாறு தடுத்து நிறுத்தினர்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயுள்ள நீண்டகால கலை, கலாசார, வர்த்தக உறவுகளை சீரழிக்காதே, தமிழகத்தில் இலங்கை யாத்திரிகர்கள் தாக்குவதை நிறுத்து, இவ்வாறான செயற்பாடுகளால் தமிழ் நாட்டுக்கே பாதிப்பு போன்ற கோஷங்களை எழுப்பியவாறும், சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்திய தூதரகத்தை நோக்கி செல்ல முற்பட்டனர்.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் தமிழகமுதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கும் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் மகஜர்களைக் கையளிப்பதற்காகவும் பேரணியில் சென்றவர்கள் ஆயத்தமாக இருந்தனர். பொலிஸார் வீதித் தடைகளை போட்டு முன்னேறிச் செல்வதை தடுத்ததன் காரணமாக மகஜரை கையளிக்க 5 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.தேசிய ஒருமைப்பாட்டுப் பேரணியின் தலைவர் பி. சுந்தரலிங்கம் ரஞ்சனாஸ் குறூப் தலைவர் தேசமான்ய கே. துரைசாமி செட்டியார், திரு ஆர். அசோக்குமார், திரு. கே. ராதாகிருஷ்ணன், திரு. ரி. சிவகுமார் ஆகியோர் மட்டும் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திலுள்ள கொன்சியூலர் ஆச்சார்யா, இலங்கை தமிழ் வர்த்தக சமூகத்தினரை வரவேற்றதுடன் மகஜர்களையும் ஏற்றுக்கொண்டார். தமிழகத்தில் இலங்கை யாத்திரிகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்தியா கவலையடைந்துள்ளது என்று தெரிவித்த திரு. ஆச்சார்யா, மகஜர்களை உரிய இடங்களுக்கு அனுப்புவதாக உறுதியளித்தார்.
மகஜரை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தமிழ் வர்த்தக சமூகத்தினர், தமிழகத்தில் இலங்கை யாத்திரிகர்கள் தொடர்ந்தும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதால் இலங்கையில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்கும் அவப்பெயரை உண்டாக்கும் செயலாகும் என்றும் தெரிவித்தன
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.