வெள்ளி, செப்டம்பர் 07, 2012

ரொபர்ட் பிளக், த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்க உள்ள

ரொபர்ட் பிளக், த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்க உள்ள இலங்கை வருகின்ற அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளக், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். 12ம் திகதி இலங்கை வரும் பிளக், 13ம் திகதி இரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், சுரேஷ்பிரேமசந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்து பேசவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தவிர ஏனைய அரசாங்க மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களையும் அவர் இலங்கையில் தங்கி இருக்கும் காலப்பகுதியில் சந்திக்கவுள்ளார்.அதன் பின்னர் 14ம் திகதி அவர் ஜனாதிபதியை சந்திப்பதுடன், தமது விஜயத்தை நிறைவு செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.