அமெரிக்காவில் ஆறாவது திருமண நாளை கொண்டாடிய அபிஷேக் -ஐஸ்வர்யா
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக்பச்சனும், உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யாராயும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். என்றாலும், அதன்பிறகும் சினிமாவில் நடித்து வந்த ஐஸ்வர்யாராய், பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நடிப்பதை நிறுத்தி விட்டு, ஆரத்யா என்ற மகளை பெற்றார். இப்போது ஆரத்யாவுக்கு ஒன்றரை வயது ஆகிறது. இந்நிலையில், சமீபத்தில் தங்களது ஆறாவது திருமண நாளை கொண்டாடுவதற்காக அபிஷேக்-ஐஸ்வர்யா தம்பதியினர் ஆரத்யாவுடன் அமெரிக்கா சென்றனர். 15 நாட்களுக்கு மேலாக அமெரிக்காவில் ஜாலி டூர் மேற்கொண்ட அவர்கள், சில தினங்களுக்கு முன்பு மும்பை திரும்பினர். அப்போது, அவர்களின் வருகையை அறிந்திருந்த மீடியாவினர் விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்துக்கொண்டனர். அதனால் இதுவரை தனது மகள் ஆரத்யாவை மீடியா கண்களில் அதிகமாக படாமல் வைத்திருந்த ஐஸ்வர்யாராய், முதன்முதலாக மகளை கேமரா கண்களுக்கு காண்பித்திருக்கிறார். பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்கள் தங்களது வாரிசுகளை வெளி உலகத்துக்கு தெரியாமல்தான் வளர்ப்பார்கள். ஆனால், அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யாராய் தம்பதி இதிலிருநது மாறுபட்டு மகளை வெளி உலகத்துக்கு காண்பித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.