சூர்யா - சமந்தா ஜோடி சேரும் புதிய படம்
சிங்கம் 2-வுக்குப் பிறகு சூர்யா லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. சூர்யாவின் கால்ஷீட்டை பெறுவதில் லிங்குசாமிக்கும், கௌதமுக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதி வெற்றி லிங்குசாமிக்கு. அவரின் திருப்பதி பிரதர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கும் எனத் தெரிகிறது. இன்னும் பெயரிடப்படாத படத்தில் ஹீரோயினாக நடிக்க சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை சமந்தாவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். 'நீதானே என் பொன்வசந்தம்' படத்துக்குப் பிறகு சமந்தா நடிக்கப் போகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.