சூர்யாவை திரும்பிப்பார்கக் வைத்தவன் நான். எனக்கே ஆப்பா
நீதானே என் பொன்வசந்தம் படத்தை இயக்கிய கெளதம்மேனன், அந்த பட தோல்வியினால் அடுத்து சூர்யாவை வைத்து துப்பறியும் ஆனந்த் என்ற படத்தை இயக்க திட்டமிட்டார். அதில் நடிக்க கால்சீட் தருமாறும் சூர்யாவிடம் பேசினார். ஆனால், அதற்கு முன்பே சூர்யாவிடம் கால்சீட் கேட்டிருந்த லிங்குசாமியோ தனக்கே கால்சீட் தர வேண்டும் என்று சூர்யாவை துரத்தினார். இப்படி கெளதம், லிங்குசாமிக்கிடையே சூர்யாவின் கால்சீட்டை யார் முதலில் கைப்பற்றுவது என்கிற பலப்பரீட்சை நடந்து வந்தது. ஆனால் சூர்யாவோ, இப்போது இருக்கிற சூழ்நிலையில்,
கெளதம்மேனனைவிட, லிங்குசாமிதான் சரியான ஆள். படம் சுமாராக இருந்தாலும், பப்ளிசிட்டியைக் கொண்டே நிறுத்தி விடுவார் என்று முடிவு செய்து, சிங்கம்2 வை முடித்து விட்டு அவர் படத்தில் நடிப்பதாக கால்சீட் கொடுத்து விட்டார். இதனால் அப்செட்டாகி விட்டார் கெளதம்மேனன். காக்க காக்க என்ற படத்தை கொடுத்து இந்த சூர்யாவை திரும்பிப்பார்கக் வைத்தவன் நான். எனக்கே ஆப்பா என்று ஆபாகி போயிருந்தார். ஆனால் லிங்குசாமிக்குத்தான் மனசு கேட்கவில்லை. தன்னைப்போன்ற ஒரு டைரக்டர் அவர். கமல் மாதிரி பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்தவர், இன்றைக்கு ஒடிந்து போயிருக்கிறார். அவருக்கு ஏதாவது ஒரு வகையில் கைகொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர். தனது திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் ஐந்து படங்களில் ஒரு படத்தை கெளதம்மேனனை இயக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம். இதனால் அதுவரை லிங்குசாமியை எதிரி போல் பார்த்து வந்த கெளதம், இப்போது என் நண்பன போல யாரு மச்சான் என்று பாட்டெடுக்கத் தொடங்கியிருக்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.