புதன், மார்ச் 06, 2013

ரசிகர்களிற்காக விளம்பரங்களில் நடிக்கிறேன் - நதியா

News Serviceசினிமாவை விட என்னுடைய குடும்பத்திற்கு தான் முதல் முன்னுரிமை கொடுப்பேன் என நடிகை நதியா கூறியுள்ளார். பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நதியா. அதன்பிறகு பல்வேறு தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போதும் பூவே பூச்சூடவாவில் பார்த்த நதியா போன்றே இளமையாக காணப்படுகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் News Serviceஅதிகம் நடிக்காதது குறித்த கேள்விக்கு இப்படி பதிலளித்துள்ளார். அதாவது, தமிழ் சினிமாவோ அல்லது சீரியல்கள் செய்யவோ எனக்கு முதல்ல நேரம் கிடையாது. நான் ‌தங்கியிருப்பதோ மும்பையில. குடும்பம் தான் எனக்கு முதல் முன்னுரிமை, சினிமா அப்புறம்தான்.என் பெரிய பொண்ணு பத்தாவது படிக்கிறாள், அவளோட படிப்பை நான் பார்க்கணும். சீரியல்களில் திரும்ப திரும்ப பழைய கதைகளையே சொல்லிக்கிட்டு இருக்காங்க. சினிமாவில் எனக்கு பிடிச்ச மாதிரி வித்தியாசமான கேரக்டர் வந்தால் நான் நடிப்பேன். அப்பப்போ என் மனநிறைவுக்காவும், ‌என் ரசிக - ரசிகைகளின் சந்தோஷத்துக்காவும், சினிமா விளம்பரங்களில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.