வெற்றி இயக்குனர் பிரபு தேவாவின் அடுத்த பாலிவுட் படம்..
தமிழ், தெலுங்கில், முன்னணி நடன இயக்குனராக இருந்து, ஹீரோவாக அவதாரம் எடுத்தவர், பிரபு தேவா. பல வெற்றிப் படங்களில் நடித்தபின், அவருக்கு, இயக்குனராகும் ஆசை வந்தது. தெலுங்கு, தமிழில், இவர் இயக்கிய படங்கள், வசூலை குவித்தன. இதையடுத்து, பாலிவுட்டிலும் கால் வைத்தார். அங்கும், அவர் இயக்கிய, ரவுடி ரத்தோர், வாண்டட் ஆகிய படங்கள், பெரும் வெற்றி பெற்றன. இதையடுத்து, இந்தியில் முன்னணி இயக்குனர்களின் வரிசையில், பிரபு தேவா பெயரும் இடம்பெற்று விட்டது. அடுத்ததாக, ஷாகித் கபூர் - சோனாக்சி சின்கா இணைந்து நடிக்கும், ராம்போ ராஜ்குமார் என்ற படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு மும்பை உள்ளிட்ட
பகுதிகளில் ஜெட் வேகத்தில் நடக்கிறது. டைட்டிலுக்கு பொருத்தமாக, ஆக்ஷன் படமாக இதை எடுக்கிறோம். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக, இது இருக்கும் என்கிறார், இயக்குனர் பிரபு தேவா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.