விஜய் படத்தில் நடிக்கும் நிஷா அகர்வால்
நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும் ஒரு நடிகை. தங்கைக்காக அக்கா காஜல் அகர்வால் வாய்ப்பு கேட்பதாக இன்டஸ்ட்ரிக்குள் வதந்தி உண்டு. இந்நிலையில் இப்படியொரு செய்தி, விஜய்யின் ஜில்லா படத்தில் காஜல் அகர்வாலுடன் நிஷா அகர்வாலும் நடிக்கிறார். ஜில்லாவின் ஸ்டார்காஸ்ட்தான் முதலிலேயே ஆச்சரியமாகப் பேசப்பட்டது. மணிரத்னம், கமல் என்று ஜாம்பவான்கள் விரும்பி அழைத்தால் மட்டுமே கேரள எல்லையை தாண்டும் மோகன்லால் ஜில்லாவில் ஒரு படம் மட்டுமே இயக்கியிருக்கும் நேசனின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது முதல் ஆச்சரியம். ஜில்லாவில் காஜல் அகர்வால் விஜய்யின் ஜோடி. பரோட்டா சூரி, தம்பி ராமையா போன்றவர்களும் உண்டு. மகத் விஜய்யின் தம்பியாக நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது காஜலின் தங்கை நிஷா அகர்வாலை மகத்தின் ஜோடியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக உறுதி செய்யப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விடிவி கணேஷ், கோவை சரளா ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக படாவதி ஸ்டார் சீனிவாசனும் நடிக்கிறாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.