திங்கள், மார்ச் 18, 2013

இலங்கை அரசை எதிர்த்து போராட்டத்தில் குதிக்கிறது - தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம்

News Serviceதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது. பெப்சி தலைவர் அமீர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: * இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் இந்தியா தீர்மானம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும். * சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவுக்கு கடும் தண்டனை வழங்க இந்தியா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். * தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். * இலங்கை சிறைகளில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். * இலங்கை பிரச்னைக்கு தமிழ் ஈழம் ஒன்றே தீர்வானது. அதை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். * இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதோடு, தீவிரவாதிகளை ஊக்குவித்து இந்தியாவில் நாச வேலையில் ஈடுபடும் பாகிஸ்தானை கண்டிக்கிறோம். * இலங்கை பிரச்னை தொடர்பாக மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பெப்சி ஆதரவு தரும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமீர் 'இலங்கை தமிழர்களுக்காக திரைப்படத்துறையினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இப்போது நிலைமை மோசமாகி உள்ளது. மாணவர்கள் எந்த தலைமையும் இன்றி போராட்டம் நடத்தி வருகிறார்கள். திரைப்படத்துறையில் நாங்கள் மூத்த சங்கம் என்ற அடிப்படையில் இந்த தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். மற்ற சங்கங்களையும் ஆலோசித்து விரைவில் அடுத்த கட்ட போராட்டம் பற்றி அறிவிப்போம்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.