வெள்ளி, பிப்ரவரி 15, 2013

முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய பேரணி; மஹிந்த மறைமுக ஆதரவு

நாட்டில் இனவாதத்தைத் தூண்டிக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் பொது பல சேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புகளைத் தடை செய்ய வேண்டுமென அமைச்சர் தினேஷ் குணவர்தன விடுத்த வேண்டுகோளை சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாகவே நிராகரித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.நாட்டில் மீண்டுமொரு இனவாதத்துக்குத் தூபமிட முயற்சிக்கும் பொது பல சேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புகளைத் தடை செய்ய வேண்டுமென அவர் அங்கு வலியுறுத்திய போது அதனை இன்னொரு அமைச்சரான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த சம்பிக்க ரணவக்க கடுமையாக எதிர்த்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட ஜனாதிபதி மஹிந்தையர், அமைச்சர் தினேஷின் கோரிக்கையை உடனடியாகவே நிராகரித்தார். இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை மகரகமவில் பொது பல சேனா அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய பேரணியைனையும் கூட்டம் ஒன்றினையும் நடத்தவுள்ளது. இதனை நடத்தக் கூடாது என்ற வகையில் அரசாங்கம் எவ்வித தடைகளையும் இதுவரை பிறப்பிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.