இசைஞானியின் சேட்டைகளை வெளிச்சம் போட்டுக்காட்டவுள்ள மண்வாசனை இயக்குனர்!
தமிழ் மக்களை இனிமையாக அழைக்கும் மண்வாசனை இயக்குனர் சத்தமே இல்லாமல் தன் சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக மியூசிக் ஞானிக்கும் அவருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டிருக்குறதால, சுயசரிதையில் ஆரம்ப காலத்தல ரெண்டு பேரும் சேர்ந்து செய்த சேட்டைகளை புட்டு புட்டு வைக்கப்போகிறாராம். கடவுளுக்கு அடுத்த நான்தான் புனிதமானவன்னு சொல்லித் திரியுற மியூசிக் ஞானம் செய்த சேட்டைகளை இந்த ஜனங்க தெரிஞ்சுக்கட்டும்ன்னு தன் நண்பர்களிடம் சொல்லி வருகிறாராம் இயக்குனர். தான் அறிமுகப்படுத்திய நடிகைகளுடன் தனக்கிருந்த நட்பு பற்றியும் வெளிப்படையாக எழுதப்போறாராம். புத்தகத்தை வெளியிட பதிப்பகங்கள் நான் நீ என்று போட்டி போடுகிறார்களாம். இதற்கிடையில் ஒரு வார இதழ் தங்கள் இதழில் தொடராக எழுதுமாறும் அதற்கு பெரிய சன்மானம் வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியிருப்பதாகச் சொல்கிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.