சனி, பிப்ரவரி 02, 2013

விசாரணைக்கென அழைத்துச் சென்ற இரு சிறுவர்கள் மீது படையினர் தாக்குதல்: கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி- பரந்தன் கிராமத்தில் பாடசாலை சிறுவர்கள் இருவரை விசாரணைக்கென அழைத்துச் சென்று படையினர் தாக்கியதில் ஒரு சிறுவன் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.நேற்று காலை ந.பபிசன் (வயது10), ந.டினோசன் (வயது8) ஆகிய இரு சிறுவர்களும் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது சிறுவர்களின் வீட்டிற்கு வந்த படையினர் சிலர் குறித்த சிறுவர்களை விசாரணைக்கென படைமுகாமுக்கு, தனியே அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கு வைத்து சிறுவர்கள் இருவரையும் கைத்தொலைபேசி எங்கே யார் எடுத்தீர்கள் எனக்கேட்டுக் கொண்டே பிளாஸ்டிக் பைப்பினால் அடித்துள்ளனர். இதனால் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளான், மற்றைய சிறுவனை இருட்டு அறைக்குள் மூடி வைத்துள்ளனர். இந்நிலையில் படையினர் கூட்டிச் சென்ற சிறார்களை நீண்டநேரம் காணாத நிலையில் தேடிய பெற்றோர் படைமுகாமுக்குச் சென்றபோதே படையினர் சிறார்களை விடுவித்துள்ளனர். இதன் பின்னர் காயமடைந்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் வெளியே கூற முடியாத நிலையில் சிறுவனின் பெற்றோர் அச்சத்துடன் இருக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.