செவ்வாய், ஜனவரி 22, 2013

இலங்கை தமிழரசுக் கட்சி மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பாரிய குடையின் கீழே அணிதிரளவேண்டும்.

தந்தை செல்வா மற்றும் அமரர் இராசாமணிக்கம் போன்ற தலைவர்களினால் அன்று முன்வைக்கப்ட்ட கொள்கை வெறுமனே இந்த நாட்டில் மட்டுமல்லாமல் இந்த கொள்கை நியாயமான கொள்கை சர்வதேச சமூகத்தினால் நீதியான நியாயமான தீர்வு என ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் பட்டிருப்புத் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் சி.மு.இராசமாணிக்கத்தின் நூறாவது ஜனன தின நிகழ்வு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில்: 60 வருடஙக்ளுக்கு முன்னதாக தமிழ் மக்களுக்கு முன்னால் வந்து அம்மக்களின் ஆதரவைப் பெற்று ஜனநாயக ரீதியிலே தமிழ் பேசுகின்ற மக்கள் கொடுக்கின்ற ஆணைக்கு இலங்கையிலே ஆட்சி செய்கின்ற எந்த அரசாங்கமாக இருந்தாலும் அதற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறி தமிழரசுக் கட்சி போராடி மாறி மாறி வந்த அரசாங்கங்களோடு ஒப்பந்தங்கள் செய்து அவையெல்லாம் நிறைவேற்றப்படாத பின்னணியிலே இனிமேல் தமிழ் மக்கள் சுய மரியாதையோடு வாழ வேண்டுமாகவிருந்தால் தங்களுக்கென ஒரு நாட்டிலே வாழ முடியும் என தள்ளப்பட்டவர்களாக 1970 ஆண்டுகளிலே தனிநாட்டுக் கோரிக்கைய முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி பயணித்தது. அதனையடுத்து வாலிபர்கள் ஜனநாயக வளியில் இதனை பெறமுடியாது ஆயதம் ஏந்தி போராட வேண்டும் என்றும் அவர்கள் முன்வந்து இந்த நாட்டில் நீண்டதொரு ஆயுத போராட்ட வரலாற்றையும் நடத்தி தற்போது திரும்பவும் எங்களுடைய இருப்பபை எங்களுடைய பிறப்புரிமையை எங்களை நாங்களே ஆளுகின்ற வகையிலே ஒரு அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் இந்த 60 ஆண்டுகளிலே நிலமை முற்றாக மாறி எமது பிரச்சினை உள்நாட்டு விவகாரமாக இருந்துவிடாமல் சர்வதேச மட்டத்திலே தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே இருக்கவேண்டிய அவர்களுக்கென அங்கிகரிக்க வேண்டிய பெரும்பாண்மை சமூகமாக இருந்தாலம் அவர்களும் ஒத்த வகையிலே என்ற நிலைப்பாட்டில் நாங்கள் பங்கேற்கின்ற போது திரும்பவும் தமிழரசுக்கட்சியினுடைய ஆரம்ப கால போட்பாடு முன்வந்துள்ளது என்பதை யாவரும் அறிவோம். இவ்வாறானதொரு காலகட்டத்திலே திரும்பவும் சுயாட்சியை நாங்கள் நிறுவவேண்டும் தமிழ் மக்கள் பெரும்பாண்மையாக வாழுகின்ற பிரதேசங்களில் தங்களைத் தாங்களே ஆழக்கூடிய வகையிலே தாங்களே தீர்மானங்களையெடுக்கின்ற வகையிலே ஆட்சி அதிகாரங்களை மாற்றுகின்ற ஒரு முன்னெடுப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமரர் இராசாமணிக்கம் எந்தவிதமான கொள்கைக்கு தலைமை தாங்கினாறோ அந்தக் கொள்கை இன்று முன்னிலைக்கு வந்திருப்பதும் வெறுமனே இந்த நாட்டில் மட்டுமல்லாமல் இந்த கொள்கை நியாயமான கொள்கை இந்த தீர்வு நியாயமான தீர்வு இது நடத்தப்பட்டாக வேண்டும் என்று உலகம் முழுவதும் கூறக்கூடிய வகையிலே அந்த கொள்கை முன்னிலைக்கு வந்துள்ளது. அந்த வகையில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பாரிய குடையின் கீழே அணிதிரளவேண்டும்.  இந்த நாட்டிலே தமிழ் பேசும் மக்களுக்கு இருக்க வேண்டிய உரிமையின் அடிப்படையிலே ஆட்சி அதிகாரங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் இருக்கின்ற அரசியலமைப்புச் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் மக்கள் மத்திலே இதிகாரங்கள் பகிர்தளிக்கப்பட வேண்டும். அந்த அதிகார பகிர்வு சட்டப10ர்வமாக எங்களை நாங்களே ஆளுகின்ற வகையில் தான் அரசியலமைப்பு அமைய வேண்டும் என்பதை முன்னெடுத்துச் செல்லுகின்றோம். மார்ச் மாதத்திலே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூடவிருக்கிறது அதிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படியான பங்காற்றலை நிகழ்த்தப் போகிறது அங்கு என்ன செய்யப் போகிறீர்கள் ஏன் செல்லப் போகிறீர்கள் என பல்வேறு கேள்விகள் ஊடகங்கள் வாயிலாக வந்தவண்ணமுள்ளன. இது மக்களின் மனங்களில் எழுகின்ற கேள்விகள் அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்ற அங்கலாவிப்பு அவர்களுக்கு இருக்கிறது. தென்னாபிரிக்கா நாட்டிலே பல காலமாக பெரும்பாண்மையின மக்கள் எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த வேளையிலேயும் கூட அங்கே ஒரு மாற்றம் ஏற்பட்டு அங்கே வெள்ளை இன மக்களின் ஆட்சி அகற்றப்பட்டு அங்கு வெள்ளை இன மக்கள் சிறுபாண்மையினராக இருந்த காரணத்தினால் அவர்கள் தூக்கி எறியப்படாமல் வெள்ளை இன மக்களோடும் கறுப்பு இன மக்களோடும் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்பட்ட போது புதிய அரசியலமைப்பு 1990 ஆண்டிலிருந்து எந்த விதமாக வரையப்பட்டது அங்கு நடந்த ஒடுக்கு முகைகள் அடக்குமுறைகள் மனித உரிமை மீறல்களுக்கு அப்பால் அவர்கள் எந்த விதமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்கள். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக உண்மை நிலையை அறிகின்ற வகையிலே ஒரு ஆணைக்குழுவின் மூலமாக நடந்தேறிய விடயங்கள் அனைத்தும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு கண்டறியப்பட்டது என்ற அனுபங்கள் எல்லாம் அவர்களுக்கு எப்படியாக இருந்தது என்பதை பகிர்துகொள்வதற்காகவே நாங்கள் தென்னாபிரிக்கா செல்கிறோம். உலகிலே வெவ்வேறு இடங்களிலே இப்படியான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன கிழக்கு தீமோரிலே மாற்றமொன்று ஏற்பட்டது ஆகவே உலகிலே வெவ்வேறு இடங்களிலே மக்களினுடைய அரசியல் அபிலாசைகள் மக்களுடைய சுயநிர்ணய உரிமை மக்கள் தங்களைத் தாங்களே ஆளக் கூடிய அந்த உரிமை எந்த விதமாக கொண்டுவரப்பட்டது எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டது நாங்கள் படித்துப் பார்கின்ற போது அந்த அனுபவங்களை முன்வந்து தாங்களாகவே பகிர்ந்து கொள்வதற்கு அவர்களுக்க அவா ஒன்று இருக்கிறது அதற்காகவே நாங்கள் தென்னாபிரிக்கா செல்லவிருக்கிறோம். இவ்வாறு சர்வதே மட்டத்திலே 60 வருடங்களாக தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த தேவை இன்று சர்வதேச மட்டத்திலே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது முன்னகர்த்தப்படுகின்ற போது தொடர்ச்சியாக இந்த விழாக்களின் மூலமாக இந்த நினைவுகள் மூலமாக முன்னின்ற எமது இனத்தைக் காப்பாற்றியவர்களை நினைவுகூருவதன் மூலமாக எங்களுடைய மக்கள் எமது இருப்பை எமது மண்ணை காப்பாற்றி அதிலே நாங்கள் எங்களுடைய மண்ணை ஆளக்கூடிய ஒரு இறைமையை உருவாக்க தமிழ் தேசிய கூட்டமைப்ப பாடுபடும்" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.