அமெரிக்காவின் ஜனாதிபதியாக பாரக் ஓபாமா 2ம் தடவையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் கிலரி கிளிங்ரன் அவர்கள் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பதவியில் இருந்து விலகவுள்ளார். இதனால் இலங்கைக்கு சார்ப்பான போக்கைக் கொண்டுள்ள ரோபேட் ஓ பிளேக் அவர்களின் கை ஓங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள , மனித உரிமை மாநாட்டில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என்று சிலர் எதிர்வு கூறியிருந்தனர். இருப்பினும் அமெரிக்காவில் இருந்து தற்போது கிடைக்கும் செய்திகள் தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் பாரிய மாற்றம் எதுவும் தற்போது நிகழ்ந்துவிடவில்லை. அத்துடன் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எழுத்து மூலமான ஒரு பிரேரணையை கொண்டுவர உள்ளது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பிரேரணையை அமெரிக்கா போனவருடம் கொண்டுவந்தது. இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. அதில் 2013 மார்ச் மாதத்திற்கு முன்னதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும் எனவும், மேலும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. ஆனால் அவை எதனையும் இலங்கை அரசு செய்யவில்லை. எனவே கடுமையான , பிரேரணை ஒன்றைக் கொண்டுவர அமெரிக்கா தற்போது முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை அரசானது, அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையில் இருந்து தப்பிக்க முடியாது என்று மேலும் அறியப்படுகிறது. அமெரிக்கா இம் முறை கொண்டுவர இருக்கும் பிரேரணை தொடர்பாக மிக முக்கியமான சில விடையங்கள் இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ளது. அதனை அதிர்வு இணையம் விரைவில் வெளியிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.