ஜெனிவாவில் மனித உரிமைகள் மாநாடு நடைபெறவுள்ள 2013 மார்ச் மாதம் நெருங்க நெருங்க சிறிலங்கா அரசியலிலுள்ள மகிந்த குடும்பத்திற்கும் கடும் குலப்பனுடன் காய்ச்சல் அடிக்கத் தொடங்கியுள்ளது. ஈழத்தில் தமிழ் மக்களை அடக்கியாள நினைக்கின்ற இந்த மகிந்த குடும்பம் எதிர்வரும் மார்ச் மாதம் வரை தமிழ் மக்களின் காலில் விழுந்து புரளும் என்று தெரிகிறது. இந்தக் காலத்தில் தமிழ் மக்களை நேசிப்பது போன்று காட்டி அவர்களுக்கான பல சலுகைகளை மகிந்த அரசு அறிவிக்கலாம். இதன் ஒரு கட்டமாக தமிழ் இளைஞர், யுவதிகளை சிறிலங்கா இராணுவத்தில் இணைத்துக்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். கோத்தபாயவின் இந்த உத்தரவை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள சிறிலங்காவின் இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய, தமிழ், இளைஞர், யுவதிகள் எந்த நேரத்திலும் இராணுவத்தில் இணைந்துகொள்ள முடியுமென்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிவில் பாதுகாப்பு கடமை என்ற பெயரில் ஏமாற்றி இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் சிறிலங்கா இராணுவத்தால் பெரும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இராணுவத்தில் இணைந்துகொள்ளுமாறு இராணுவத் தளபதி தமிழ் இளைஞர்களை கோரியுள்ளமை நகைப்புக்கிடமாக உள்ளதென்று தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை மாலை இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய, தமிழ் இளைஞர், யுவதிகளுகள் இராணுவத்தில் இணைந்துகொள்வதற்கு தடை இல்லை. அதற்கு தகுதியுள்ளவர்களுக்கு எப்பொழுதும் வாசற்கதவு திறந்தே உள்ளது என்று கூறியிருக்கிறார். இராணுவத்துக்கு இணையக்கூடிய தகுதிகள் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தொடர்பில் கண்டறிந்து அவர்களை இணைத்துக்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உத்தரவிட்டிருக்கிறார் என்றும் இராணுவ தளபதி கூறினார். கடந்த முப்பது வருடமாக தமிழ் மக்களை அழித்தொழித்தது மட்டுமன்றி ஏற்கனவே தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணைத்து அவர்களை சித்திரவதை செய்ததன் மூலமும் ஈழத் தமிழ்; மக்களிடையேயும் சர்வதேசத்திலுள்ள தமிழ் மக்களிடையேயும் பெரும் வெறுப்பைச் சம்பாதித்துள்ள சிறிலங்கா இராணுவத்தில் இனியும் தமிழ் இளைஞர், யுவதிகள் இணைவார்கள் என்று சிங்களம் நினைக்குமாயின் அது அவர்களின் முட்டாள்தனமான நினைப்பாகவே அமையுமென்று தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். வியாழன், ஜனவரி 24, 2013
ஜெனிவாவில் மனித உரிமைகள் மாநாடு - நடுங்கும் மகிந்த குடும்பம்
ஜெனிவாவில் மனித உரிமைகள் மாநாடு நடைபெறவுள்ள 2013 மார்ச் மாதம் நெருங்க நெருங்க சிறிலங்கா அரசியலிலுள்ள மகிந்த குடும்பத்திற்கும் கடும் குலப்பனுடன் காய்ச்சல் அடிக்கத் தொடங்கியுள்ளது. ஈழத்தில் தமிழ் மக்களை அடக்கியாள நினைக்கின்ற இந்த மகிந்த குடும்பம் எதிர்வரும் மார்ச் மாதம் வரை தமிழ் மக்களின் காலில் விழுந்து புரளும் என்று தெரிகிறது. இந்தக் காலத்தில் தமிழ் மக்களை நேசிப்பது போன்று காட்டி அவர்களுக்கான பல சலுகைகளை மகிந்த அரசு அறிவிக்கலாம். இதன் ஒரு கட்டமாக தமிழ் இளைஞர், யுவதிகளை சிறிலங்கா இராணுவத்தில் இணைத்துக்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். கோத்தபாயவின் இந்த உத்தரவை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள சிறிலங்காவின் இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய, தமிழ், இளைஞர், யுவதிகள் எந்த நேரத்திலும் இராணுவத்தில் இணைந்துகொள்ள முடியுமென்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிவில் பாதுகாப்பு கடமை என்ற பெயரில் ஏமாற்றி இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் சிறிலங்கா இராணுவத்தால் பெரும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இராணுவத்தில் இணைந்துகொள்ளுமாறு இராணுவத் தளபதி தமிழ் இளைஞர்களை கோரியுள்ளமை நகைப்புக்கிடமாக உள்ளதென்று தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை மாலை இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய, தமிழ் இளைஞர், யுவதிகளுகள் இராணுவத்தில் இணைந்துகொள்வதற்கு தடை இல்லை. அதற்கு தகுதியுள்ளவர்களுக்கு எப்பொழுதும் வாசற்கதவு திறந்தே உள்ளது என்று கூறியிருக்கிறார். இராணுவத்துக்கு இணையக்கூடிய தகுதிகள் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தொடர்பில் கண்டறிந்து அவர்களை இணைத்துக்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உத்தரவிட்டிருக்கிறார் என்றும் இராணுவ தளபதி கூறினார். கடந்த முப்பது வருடமாக தமிழ் மக்களை அழித்தொழித்தது மட்டுமன்றி ஏற்கனவே தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணைத்து அவர்களை சித்திரவதை செய்ததன் மூலமும் ஈழத் தமிழ்; மக்களிடையேயும் சர்வதேசத்திலுள்ள தமிழ் மக்களிடையேயும் பெரும் வெறுப்பைச் சம்பாதித்துள்ள சிறிலங்கா இராணுவத்தில் இனியும் தமிழ் இளைஞர், யுவதிகள் இணைவார்கள் என்று சிங்களம் நினைக்குமாயின் அது அவர்களின் முட்டாள்தனமான நினைப்பாகவே அமையுமென்று தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.