
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பெறுபேறுகளின் படி அம்பாறை மாவட்டத்தில் உயிரியியல் துறையில் முதனிலை மாணவியாக அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலை மாணவி செல்வி தணிகாசலம் தர்சிகா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவர் மூன்று படங்களிலும் A சித்தி பெற்று மாவட்டத்தில் முதனிலை மாணவியாக முடிசூடியுள்ளார். அக்கரைப்பற்று ஸ்ரீராமகிருஷ்னா தேசிய பாடசாலையின் மாணவி தனிகாசலம் தர்ஷிகா உயர் தர விஞ்ஞான பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளார்.இந்த மாணவி அக்கரைப்பற்று 7/3ஆம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட நாவலர் வீதியில் வசிக்கும் அதிபர் தணிகாசலம் குமுதா தம்பதியினரின் இரண்டாவது புதல்வியாவார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.