மக்கள் தற்காலிக அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும்: கோத்தபாய ராஜபக்ச
மக்கள் தற்காலிகமான அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நகர அபிவிருத்தி நடவடிக்கைகளின் காரணமாக மக்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படக் கூடும். உலகத் தரத்திலான இயற்கை எழில்மிக்க நகரமாக கொழும்பை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேரிப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்காக பத்தாயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். நகரின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக போதைப் பொருள் கடத்தல், வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் நிறுத்தப்படும். உலக வங்கியின் உதவியுடன் அரசாங்கம் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களை கொழும்பில் முன்னெடுத்து வருகின்றது என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகரசபையின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.