தெரிவுக்குழு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் மீளவும் கூட்ட முடியாது – சுசில் பிரேமஜயந்த -
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில் தெரிவுக்குழுவினை மீளவும் கூட முடியாது என பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,பிரதம நீதியரசர் தொடர்பில் தெரிவுக்குழுவின் விசாரணைகள் முடிவடைந்து அறிக்கையும் உத்தியோக பூர்வமாக நாடாளுமன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மீளவும் கூடி குற்றவியல் பிரேரணை தொடர்பில் விசாரணை நடாத்த முடியாது. எனவே இது தொடர்பில் நாடாளுமன்றம் விவாதம் நடத்த வேண்டுமென சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதம நீதியரசர் தெரிவுக்குழுவின் விசாரணை தொடர்பில் மேல்நீதிமன்றில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.