வெள்ளி, ஜனவரி 04, 2013

எதிர்வரும் 2014 ஆம் ஆண்டில் ஆட்சியமைப்போம் - இத்தாலியில் ரணில் அறிவிப்பு!

News Serviceஎதிர்வரும் 2014ஆம் ஆண்டில் தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழல் நிலவுகின்றது. அந்த தேர்தலின் போது, நாட்டில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமொன்று உருவாகும் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று ரோம் நகருக்கு சென்றிருந்தார். அங்கு ஐ.தே.க ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி இந்த ஆண்டில் பல்வேறு முன்னேற்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. அத்துடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களை ஐ.தே.க நடாத்தும் என்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.