பிரதம நீதியரசரை இழிவுபடுத்திய வார்த்தைப் பிரயோகங்கள் ஒளி நாடாவிலிருந்து நீக்கம்
பிரதம நீதியரசரை இழிவுபடுத்திய வார்த்தைப் பிரயோகங்கள் ஒளி நாடாவிலிருந்து நீக்கம் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணையின் போது அவரை இழிவுபடுத்தும் விதமாக ஆளும் தரப்பினர் சிலரால் எழுப்பப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் ஒளி நாடாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளின் போது பிரதம நீதியரசரை ஆளும் கட்சி உறுப்பினர்கள் இழிவாகப் பேசியதாக, விசாரணைகளில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள் தொடர்பிலான ஒளி நாடாவிலிருந்து இந்த இழிவான வார்தைப் பிரயோகங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களின் முன் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரதம நீதியரசரை தெரிவுக்குழு விசாரணையின் போது யாரும் தூற்றவில்லை என்றும், விசாரணை தொடர்பிலான ஒளிநாடாவை தேவைப்பட்டால் சபாநாயகரின் அனுமதியுடன் பார்வையிடலாம் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.