ஞாயிறு, டிசம்பர் 09, 2012

சில நாட்களாக ஈழத்தில் சிங்கள இனவெறியாட்டம் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண நகரில் புகுந்து 25க்கும் மேற்பட்ட தமிழர்களை சிங்கள காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை. மாவீரர் நாள் கடைப்பிடிக்க முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தி அவர்களில் பலரை இலங்கை காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண நகரில் புகுந்து இருபத்தைந்துக்கும் அதிகமான தமிழ் இளைஞர்களையும் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டிருப்பவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவலும் சரிவர அறிவிக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.