ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி நிரந்தரப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் ஆபிரிக்காவிற்கான இலங்கைப் பிரதி உயர்ஸ்தானிகராக சவேந்திர சில்வாவை நியமிப்பதற்கு எதிராக இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. மனித உரிமை அமைப்பு, தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த சில அமைப்புக்கள், பேடன் தமிழர் பேரவை, தென் ஆபிரிக்க தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகளாவிய புலி ஆதரவு அமைப்புக்களும் இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.குறிப்பாக க்ளோபல் தமிழ் போரம் போன்ற அமைப்புக்கள் சவேந்திரவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.