சாவதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 5 தமிழ் அரசியில் கட்சிகள் கூட்டடிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று
திங்கட்கிழமை காலை 11.00 மணி தொடக்கம் 12.00 வரை கிளிநொச்சி கச்சேரிக்கு முன்பாக நடாத்தியிருந்தன. இப்போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஐா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் மணிவண்ணன், வவுனியா மாவட்ட இணைப்பாளா் சிவகஐன், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எவ்செயலாளா் சுரேஸ் பிறேமச்சந்திரன், புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசகட்சி செயலாளா் செந்திவேல், நவ சமசமாயக் கடசியின் உறுப்பினா்களான திருநாவுக்கரசு, ஐனகன், மகேந்திரன், ஐனநாயக சோசலிச கட்சியின் செயலாளா், நகர சபை உறுப்பினா் சிவாஐிலிங்கம் மற்றும் பொது மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனா். போராட்டத்தில் கலந்து கொண்டவா்கள். சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொய்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவா்களை உடன் விடுதலை செய்ய வேண்ட தாயகத்தில் இருந்து இராணுவத்தினர் உடனடியாக முற்றாக வெளியேற வேண்டும். பயங்கவைாதத் தடுப்பு பொலீசாரினால் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் கைது வேட்டையை உடன்நிறுத்த வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுவிக்கப்படல் வேண்டும். புனா்வாழ்வு என்னும் பெயரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவா்கள் உடன் விடுவிக்கப்படல் வேண்டும். அரசினால் கடத்தப்பட்ட பின்னரும், இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரும் காணாமல் போனவா்கள் தொடா்பில் சிறீலங்கா அரசு பதில கூறவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.