செவ்வாய், டிசம்பர் 04, 2012

குற்றப் பிரேரணையில் குறிப்பிட்டுள்ள ஏதேனும், ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் பதவி விலக தயார்: சிரானி

News Serviceஏதேனும் ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் பதவி விலகப் போவதாக பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். நான் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. குற்றப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குற்றச் செயலிலும் நான் ஈடுபடவில்லை. நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த விசாரணைகளில் ஆஜராகின்றேன். நாள் தோறும் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நிதவான்கள் தொலைபேசி மூலம் அழைத்து சந்திக்க விரும்புவதாக கோருகின்றனர். அனைவரையும் தனித்தனியாக சந்திக்க முடியாத காரணத்தினால் இவ்வாறு கூட்டமொன்றை ஏற்பாடு செய்தேன் என தெரிவித்துள்ளார். மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான்களுக்கான விசேட கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கூட்டத்தில் பங்கேற்ற நீதவான்களில் சிலர் அரசாங்கத்திற்கு எதிராகவும், சிலர் பிரதம நீதியரசருக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.