சனி, டிசம்பர் 15, 2012

போரில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்!

போரில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்!மன்னார் அடம்பனை சேர்ந்த 4 வயது நிரம்பிய சிறுமியான அனஸ்ரா இவானி கேட்கும் திறனை இழந்த நிலையில் -அறுவைச்சிகிச்சைக்காக நிதியுதவி கோரியுள்ளார்கள் பெற்றோர்கள்.யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் - ஆண்டான் குளம் கிராமத்தில் வசித்து வரும் 4 வயது நிரம்பிய சிறுமியான அனஸ்ரா இவானி மறியதாஸ் என்ற சிறுமி பிறந்தது முதல் கேட்கும் திறனை இழந்த நிலையில் இருக்கின்றார். இவர்களுடைய பெற்றோர் யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்து மீண்டும் அதே கிராமத்தில் குடியமர்ந்துள்ளனர்.இச் சிறுமியின் அறுவைச்சிகிச்சைக்காக 24 இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது.எனவே புலம் பெயர்ந்த உரவுகளிடமிருந்து தங்களினால் இயன்ற உதவியினை அவருடைய பெற்றோர் எதிர்பார்த்து நிற்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.