வெள்ளி, டிசம்பர் 14, 2012

தான் நியமித்த குழுவை நம்பாத ஜனாதிபதி மஹிந்த

பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்பட்டு வரும் எதிர்ப்பலைகள் காரணமாக தாம் நியமித்த குழுவே சுயாதீனமற்றது என பகிரங்கமாக ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் அமைப்பு மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உதவிகளை பெற்று சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளும் வகையில் குழுவொன்றை நியமிக்கும் நேர்மையான நோக்கத்துடன் அரசாங்கம் செயற்பட்டால், அதற்கு எதிர்க்கட்சி தனது ஆதரவை வழங்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெரிவுக்குழுவின் விசாரணைகள் நியாயமானதாக இல்லை எனக் கூறி, ஜனாதிபதி தாமே மற்றுமொரு குழுவை நியமித்தால் அது குறித்து நம்பிக்கை கொள்ள முடியாது என்பதை புதிதாக கூறவேண்டியதில்லை எனவும் மங்கள சமரவீர கூறியுள்ளார். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முடிவுகளை மீள் விசாரணை செய்ய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ஜபக்ஷநேற்றுதெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.