திங்கள், டிசம்பர் 17, 2012
சட்டவிரோதமான அவுஸ்திரேலியா வருவோர் 72 மணித்தியாலங்களுக்குள் நாடுகடத்தப்படுவர்- அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார்
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் வகையில் சட்டவிரோதமாக குடியேறுவோர் 72 மணித்தியாலங்களுக்குள் நாடுகடத்தப்படுவர் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் எச்சரித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தஞ்சம் கோருவோரை தாம் பொருளாதார புகலிடக் கோரிக்கையாளர்களாகவே கருதுவதாவும், அவர்கள் அவுஸ்திரேலியாவில் வருமானத்தை ஈட்டி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே இந்த ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
இன்றைய செய்தியாளர் மாநாட்டின் போது அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்.
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறி அகதி அந்தஸ்து கோருவோரை நாம் பொருளாதார தஞ்சக் கோரிக்கையாளர்களாகவே கருதுகின்றோம். அவர்கள் அவுஸ்திரேலியாவில் வருமானம் ஈட்டலாம் என்ற எதிர்ப்பார்ப்பிலேயே அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்து செல்கின்றனர்.
மக்கள் இவ்வாறு பயணிப்பதானால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. ஏனெனில் அவுஸ்திரேலிய அரசு புதிய சட்டதிட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதாவது சட்டவிரோதமாக குடியேறி புகலிடம் கோருவோர் 72 மணித்தியாலங்களுக்குள் நாடுகடத்தப்படுவர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 800 பேர் இவ்வாறு நடுகடத்தப்பட்டுள்ளனர்.
நிலைமை இவ்வாறிருக்க பணம் சம்பாதிக்கும் நோக்கில் சில கடத்தல்காரார்கள் மக்களை ஏமாற்றி, அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெறலாம், நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையை வளர்த்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
இவ்வாறு ஏமாறும் மக்களும் பணத்தை கொடுத்து, உயிர் ஆபத்து மிக்க பாதுகாப்பற்ற பணங்களை மேற்கொள்கின்றனர். இதில் சிலர் உயிரிழந்து இருக்கினறனர்.
எனவே இனிவரும் காலங்களில் அவ்வாறு யாரும் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறினால் அவர்கள் 72 மணித்தியாலத்திற்குள் திருப்பியனுப்பப்படுவர் என்ற கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அத்துடன் சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களைத் தடுப்பதற்காக இலங்கை அரசுடன் இணைந்து ஒரு செயற்திட்டமொன்றையும் மேற்கொள்ளவுள்ளோம்.
கடல்வழி பாதுகாப்பு ஒத்துழைப்பு, புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் உட்பட 4 அம்ச வேலைத்திட்டமென்று நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.