
இலங்கையில் இடம் பொற்ற இறுதிப் போரில், தமிழ் மக்களை பாதுகாக்கத் தவறிய ஐக்கிய நாடுகள் சபை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா.சபையின் உள்ளக அறிக்கையில் இறுதிப்போரின் போதான ஐ.நா. சபையின் பணியாளர்களது செயற்பாடுகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது வருத்தத்துக்குரிய செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம். இறுதிப் போரின்போது வன்னிப்பகுதியில் இருந்து ஐ.நா. பணியாளர்கள் நிர்ப்பந்தத்தின் பேரில் விலக்கிக் கொள்ளப்பட்டனர். இதுவே இந்த நிலைமையை உருவாக்கியது. ஐ.நா.சபையின் இந்தநடவடிக்கை,தமிழ்மக்களின் வாழ்வில் அபசகுனமாகவே கருதப்படுகிறது. எதிர்காலத்திற்கான நல்ல பாடம் என மாத்திரம் இந்த நடவடிக்கையைக் கருத முடியாது. உண்மையில் ஐ.நா.சபை இப்போது தனது தவறினை உணர்ந்திருந்தால், நிச்சயம் இனிவரும் காலங்களில் இலங்கை விடயத்தில் காத்திரமான நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றோம்- என்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.