திங்கள், நவம்பர் 05, 2012

ஒருங்கமைப்பு அவுஸ்திரேலியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமுள்ள ஒரு அமைப்பாக ஒருங்கமைப்பு

. அவுஸ்திரேலியத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசியுடனும் வழிகாட்டலுடனும் ஒருங்கமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் ஆரம்ப செயக்குழுக் கூட்டம் கடந்த அக்டோபர் 7ம் திகதி மெல்பேர்ன் நகரில் நடைபெற்றது. அவுஸ்திரேலியத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளைப் பெறப் பாடுபடுவதுடன் இவ் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் சகல அமைப்புக்களுடனும் இணைந்து செயற்படும். இவ்வமைப்பின் பிரதான நோக்கங்கள்; - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமுள்ள ஒரு அமைப்பாக்குதல். கூட்டமைப்பின் நியாயமான நிலைப்பாடு செயற்பாடு ஆகியவற்றை ஆதரித்து அதன் பேரம் பேசும் சக்தியை மேம்படுத்தல். - புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே போதியளவு புரிந்துணர்வை ஏற்படுத்தல். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் தமிழ் அமைப்புக்களுக்கும் கூட்டமைப்புக்குமிடையே அதிகளவு புரிந்துணர்வையும் இணக்கப்பாட்மையும் ஏற்படுத்தல். - கூட்டமைப்பு புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் நியாயமான உணர்வுளை அறிந்து அவற்றைக் கருத்திற்கெடுத்துச் செயற்பட களமமைத்தல். - கலந்துரையாடல்கள் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அதன் செயற்பாடு பற்றிய தெளிவு ஏற்படுத்தல். இதனூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் செல்வாக்கினை தமிழ் மக்களிடையே அதிகரித்தல். - போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்புவாழ்விற்கு உதவுதல். இதனை அடைவதற்கான அரசியல் சூழல் பொருளாதார சூழல் சமூக சூழல் ஏற்பட தேவையான வழிமுறைகளை ஆராய்தல் திட்டங்களை வகுத்தல் தேவையான வளங்களை இனங்காணல் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.