திங்கள், நவம்பர் 05, 2012

அமெரிக்க அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்

News Serviceஅரியநேந்திரன் அவர்களுக்கும் அமெரிக்க இராஜாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. தென்னாசியாவின் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலர் Alyssa Ayres மற்றும் மனித உரிமை விகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் உதவிச் செயலர் Jane Zimmerman ஆகியோருடன் இசந்திப்பு இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அமெரிக்க அரசுக்கு நன்றி தெரிவித்த அரியநேந்திரன் அவர்கள் சிறிலங்காவினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தென்தமிழீழத்தின் நிலவரங்கள் குறித்து விளக்கமாக எடுத்துக்கூறியுள்ளார். குறிப்பாக போரினால் கணவன்மார்களை இழந்து நிற்கும் பெண்களின் வாழ்வாதாரப்பிரச்சனை காணாமல்போயுள்ளவர்களின் நிலைமை மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த கிழக்கு தேர்தல் நிலைவரங்கள் குறித்து இசந்திப்பில் உரையாடப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் வேறுபல அரச மற்றும் அரசியல் மட்டப்பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களை நடத்தியுள்ளார். தொடர்ந்து அமெரிகாவின் இலங்கைத் தமிழ் சங்கத்தில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியிருந்ததோடு தமிழர் பிரிதிநிதிளுடனும் முக்கிய சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.