புதன், நவம்பர் 07, 2012

கே.பி.யை இதுவரை அரசாங்கம் குற்றவாளியாக அறிவிக்கவில்லை: ஹக்கீம்

கே.பி.யை இதுவரை அரசாங்கம் குற்றவாளியாக அறிவிக்கவில்லை: ஹக்கீம்கே.பி. எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் மீது அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு குற்றச்சாட்டினையும் முன்வைக்கவில்லை. அவருக்கு புனர்வாழ்வளிப்பதோ இல்லாவிட்டால் அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை தாக்கல் செய்வதோ எதுவாக இருந்தாலும் அதனை சட்டமா அதிபரே தீர்மானிக்க வேண்டும். அவ்வாறானதொரு தீர்மானம் இல்லாத பட்சத்தில் கே.பி.விடயத்தில் எதுவும் செய்ய முடியாது என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி. மங்கள சமரவீரவினால் கே.பி. தொடர்பில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “குற்றவாளியாக அழைத்து வரப்பட்ட குமரன் பத்மநாதன் அரசாங்கத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனாலும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை. அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை. அந்த வகையில் கே.பி.க்கு புனர்வாழ்வு அளிப்பதா அல்லது அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை சமர்ப்பிப்பதா என்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமே தீர்மானிக்க வேண்டும். எனினும் இதுவரையில் அவ்வாறானதொரு தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கே.பி. தொடர்பில் எதுவும் செய்ய முடியாது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.