திங்கள், நவம்பர் 12, 2012

திவிநெகுமவை நிறைவேற்றுவதற்காகவே, சிராணிக்கு எதிராக அரசு குற்றவியல் பிரேரணை தாக்கல் செய்துள்ளது: சுமந்திரன்

அரசாங்கத்துக் எதிராக எந்த ஒரு நீதிபதி தீர்ப்புக்கூறினாலும் அவருக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை கொண்டு வரும் நிலைமை News Serviceஎதிர்க்காலத்தில் தோன்றும் ஆபத்து உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. நாடர்ளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இன்று அரசாங்கம் பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை கொண்டு வருகிறது. இது இலங்கையின் நீதித்துறைக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக இங்கு நீதித்துறையை நிறைவேற்று அதிகாரம் முழுமையாக ஆக்கிமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளமையை காணமுடிகிறது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இலங்கையின் நற்பெயருக்கு சர்வதேசத்தில் நல்லபெயர் இல்லை. இந்தநிலையில் பிரதம நீதியரசரின் பிரச்சினை நாட்டுக்கு மேலும் இழுக்கை தேடிக்கொடுக்கும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.