இந்திய உளவுப்பிரிவிடம் மில்லியன் கணக்கில் பணம் பெறுகின்றவர்கள் இந்திய நாட்டுப் பிரதிநிதியாக செயற்பட்டு இந்தியாவுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் என விமல்வீரவம்ச உரக்கச் சொன்னார்.மேற்குறிப்பிட்டவாறு எம்.பி சஜித் பிரேமதாஸவைப் பார்த்து கூறியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ உயிருடன் இருந்தால் சஜித்தின் செயற்பாடுகளைப் பார்த்து இப்படி ஒரு பிள்ளையையா பெற்ரெடுத்தேன் என வருந்தி தற்கொலை செய்திருப்பார் என விமல் மேலும் கூறியிருந்தார். இன்று பாராளுமன்றத்தில் நடந்த கலந்துரையாடலின் போது விமல்வீரம்சவுக்கும் சஜித் பிரேமதாஸவுக்கும் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டபோதே இவ்வாறு கூறியிருந்தார். இந்திய உளவுப்பிரிவிடம் மாதமொன்றுக்கு 5 மில்லியன் ரூபாய்க்களைப் பெற்றுக்கொண்டு இந்தியப் பிரஜையாக இலங்கையில் செயற்பட்டு இந்தியாவுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் என உரக்கக் கடுந்தொனியில் வீரவம்ச கூறியிருந்தார். அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது போன்று வீடமைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என சஜித் கேட்கப்பட்டவேளையே இவ்வாறு தர்க்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியா இலங்கையின் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்திருப்பது எந்த அடிப்படையில் என்பது தெரியாது. எனினும், வடக்கு கிழக்கு மக்களுக்காக அரசு வீடுகளை அமைத்துக் கொடுக்கின்றது. இந்தியா இலங்கையில் வீடுகளை அமைப்பதற்கு 35100 மில்லியன் ரூபாய்க்களை ஒதுக்கியிருக்கின்றது. ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வீடமைப்பு மட்டுமல்லாது வீதி அபிவிருத்து உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கும் அப்பணத்தில் இருந்தே செலவு செய்கின்றனர் எனக் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.