புதன், அக்டோபர் 24, 2012

சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்டவரை இலங்கை அரசாங்கம் ஆதரித்தது – விக்கிலீக்

நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்ட நபரை இலங்கை அரசாங்கம் ஆதரித்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. கொலை குற்றச் செயல் ஒன்றுக்காக 1997ம் ஆண்டு சிறை வைக்கப்பட்ட பால்க் ருனே ரோவிக் என்பவரே இவ்வாறு, எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக செயற்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ருனே ரோவிக்கின் நடவடிக்கைகளை நோர்வே புலனாய்வுப் பிரிவு உன்னிப்பாக கண்காணித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே அரசாங்கம் இலங்கை தொடர்பாக பின்பற்றி வரும் கொள்கைகள் மற்றும் அமைச்சர் சொல்ஹெய்மின் நடவடிக்கைகள் குறித்து ருனே ரோவிக் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வந்தார். இலங்கை தொடர்பில் நோர்வேயின் வகிபங்கை ருனே ரோவிக் இலங்கை உள்ளிட்ட உலக ஊடகங்களில் விமர்சனம் செய்திருந்தார். நோர்வே இலங்கையில் பயங்கரவாதத்தை விதைப்பதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.இலங்கைக் கடும்போக்காளர்கள், ருனேவிற்கு நிதி உதவிகளை வழங்கி வருவதாக நோர்வே வெளிவிவகார அமைச்சின் அதிகாரி சொன்ட்ரே புஜோவிட்தெரிவித்திருந்தார்.இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறிச் செயற்பட்டு வருவதாகவும், சமாதானத்தை நிலைநாட்டுவதில் கூடுதல் அர்ப்பணிப்பு தேவை எனவும் குறிப்பிட்டிருந்தார். ருனேவின் நடவடிக்கைகள் எரிக் சொல்ஹெய்மின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுஎன அவர் தெரிவித்திருந்தார். 2007ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.