வியாழன், மார்ச் 07, 2013

அந்தமானில் பிறந்ததினத்தை கொண்டாடிய வரலட்சுமி

News Serviceசரத்குமாரின் மகளும் 'போடா போடி' படத்தின் நாயகியுமான வரலட்சுமி மார்ச் 3ம் தேதி தனது பிறந்தநாளை அந்தமானில் கொண்டாடியுள்ளார். நண்பர்கள் பட்டாளத்துடன் அந்தமான் கடற்கரையில் ஆடிப்பாடி கொண்டாடியதைப் பற்றி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் வரலட்சுமி. சிம்பு நடித்த 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அந்தப்படம் சரியாக போகாத காரணத்தால் பட வாய்ப்புகள் எதுவும் அவரைத் தேடி வரவில்லை. எனினும் நட்சத்திர கலைவிழா, ஷோரும் திறப்பு விழா,சி.சி.எல்.கிரிக்கெட் போட்டியில் சியர்ஸ் கேர்ள் என பல வேலைகளை செய்து வருகிறார் வரலட்சுமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.