'ஐ' இல் 5 நிமிடம் நடித்த பவர் 5 இலட்சம் சம்பளம் கேட்கிறார்..!
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்துள்ள பவர் ஸ்டார் சீனிவாசனின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருந்து வருகிறது. அவர் நடித்தால் அந்த படம் கண்டிப்பாக வெற்றி பெற்று விடும் என்று யூகித்து ஆளாளுக்கு அவரை புக் பண்ணி வருகிறார்கள். இதனால் ஒரு காலத்தில் பணம் கொடுத்து நடித்து வந்த பவர், இப்போது ஒரு நாள் கால்சீட்டுக்கே 2 முதல் 3 லட்சம் வரை சம்பளம் பேசி நடித்து வருகிறார். காமெடி வேடங்களில் நடிப்பதற்கே பல படங்கள் க்யூவில் நிற்பதால், தற்காலிகமாக ஹீரோவாக நடிப்பதைகூட தள்ளி வைத்துள்ளார் பவர்ஸ்டார். இந்த நிலையில், ஷங்கரின் ஐ படத்தில் ஒரு ரோபோ வேடத்தில் நடித்து வரும் பவர், அந்த படம் வெளிவந்தால், இப்போது 3 லட்சமாக இருக்கும் சம்பளத்தை ஐந்து லட்சமாக்கி விடுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். அதுவும் ஐ படத்தில் அவர் படம் முழுக்க வரவில்லையாம். ஒரு ஐந்து நிமிடம் மட்டுமே அவர் நடிக்கிற ரோபோ வேடம் வருகிறதாம். அப்படியொரு கேரக்டரை முன்வைத்தே இப்படி பேசுகிறார் பவர். ஆனால் ஒருவேளை அவர் மார்க்கெட் இருக்கிற ரேஞ்சைப்பார்த்தால், அவர் சொன்னதையும் செய்வார், சொல்லாததையும செய்வார் என்று நினைக்கும் படாதிபதிகள், முன்கூட்டியே அவரை புக் பண்ணி வைத்து விடும் வேலைகளிலும் தீவிரமடைந்திருக்கிறார்கள். பவருக்கு வந்திருக்கும் இந்த மவுசைப்பார்த்து கோலிவுட்டின் ஏனைய காமெடி நடிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துபோய் நிற்கிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.