செவ்வாய், ஜனவரி 08, 2013

விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பும்போது ஆப்பு வைத்த கனேடிய அமைச்சர்

கனேடிய குடியுரிமை அமைச்சர் ஜேசன் கெனி பக்கச்சார்பான முறையில் செயற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் கெனி வெளியிட்ட கருத்துக்கள் பக்கச்சார்பானதும், சமனிலைத் தன்மை அற்றதுமானவை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். வேறு ஒரு நாட்டின் உள்விவகாரத்திற்கு பொருத்தமான வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டு மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிவினைவாத அரசியல் நோக்கங்களைக் கொண்டவர்களின்(புலிகள்) தரவுகளின் அடிப்படையில் கனேடிய அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் பீரிஸ்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஏனைய நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து அரசாங்கம், கனேடிய அமைச்சருக்கு தெளிவுபடுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் போது அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் அரசாங்கத்தின், தெளிவுபடுத்தல்களுக்கு புறம்பான வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 4ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்த அரசாங்கம் முயற்சித்த போதிலும், அந்தத் திகதி கூட்டமைப்பிற்கு பொருத்தமானதாக அமைந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காமலேயே கனேடிய அமைச்சர் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.இலங்கையின் உள்நாட்டு சூழ்நிலை காரணமாகவே அதிகளாவான புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடாவிற்கு படையெடுப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த கனேடிய குடியுரிமை அமைச்சர் ஜேசன் கெனி தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.