வெள்ளி, ஜனவரி 04, 2013

ஷிராணி பண்டாரநாயக்கவின் பிரதம நீதியரசர் பதவி பறிபோகும்! - பிரபல ஜோதிடரின் ஆரூடம

குற்றப் பிரேரணை விடயத்தில் இறுதி விளைவாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பெரும் இக்கட்டான நிலைக்கு தள்லப்பட்டு, நிச்சயமாக பிரதம நீதியரசர் பதவி இல்லாமற் போகும் என ஜோதிடர் விமலரத்ன தெரிவித்துள்ளார்.சிரேஷ்ட சட்டத்தரணியும், உத்தியோகப் பற்றற்ற மாஜிஸ்ரேட்டும், பிரபல எதிர்வுகூறல் நிபுணருமான சோதிடருமான மாபலகம விமலரத்ன மேலும் தெரிவிக்கையில்,அவரின் ஜாதகப்படி அவர் ராகு திசையில் சனி புத்தியை கடந்து கொண்டிருக்கிறார். அவர் வெளிநாட்டு சக்திகளில் சிக்கியுள்ளார். அவரால் பொறுப்பாகவும் தெளிவாகவும் செயற்பட முடியவில்லை. அவரது ஜாதகப்படி அவர் சகல துறைகளாலும் கடும் அசெளரியங்களுக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியாதென்றும் மாபலகம விமலரத்ன கூறியுள்ளார். கிரக மாற்றங்கள் அவரின் நிலையையும் கெளரவத்தையும் மட்டுமல்ல அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிமன்ற துறையையும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஜாதகப்படி அவருக்கு இப்போது வியாழ திசையில் வியாழ புத்தி நடக்கிறது. இந்த குற்றப் பிரேரணையால் அவருக்கு எவ்வித நிர்ப்பந்தமும் நிகழாது என்பதை தெளிவாகக் கூற வேண்டும். ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு பிரதம நீதியரசர் பதவியிலிருந்து விரைவில் நீங்க நேரிடும். இன்னும் சில நாட்களில் பதில் பிரதம நீதியரசர் ஒருவரை நியமிக்கவும் இடமுண்டு. அரசமைப்பின் 109/2 பிரிவில் கீழ் பதில் பிரதம நீதியரசரை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு எனவும் விமலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.பல எதிர்வுகூறல்களை வெளியிட்டு, அவை அவ்வாறே நிகழ்ந்ததாக கூறும் ஜோதிட நிபுணரான மாபலகம விமலரத்ன காலி வத்துரம்ப ஸ்ரீ சுனந்தாராம புராண விகாரையில் கவிஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.