புதன், ஜனவரி 23, 2013

ரணில்-சஜித் விரைவில் சந்திப்பர்: திஸ்ஸ

ஐ.தே.க. பிரதி தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு பெரிதும் காணப்படுகின்றது. இது தொடர்பாக ஐ.தே.க. தலைவர் விக்கிரமசிங்க முன்னாள் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவுடனும் இந்த பதவிக்கு வரக்கூடிய ஏனைய அங்கத்தவர்களுடனும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை கட்சியின் பிரதித்தலைவராக மீண்டும் நியமிக்கப்படாது ஏன்? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், கட்சிக்கும் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் பிரச்சினையேதும் இல்லை. ஆயினும் அடுத்த பிரதி தலைவர் பதவி பற்றி தீர்மானிக்கும்போது கட்சியின் வேலைத்திட்டத்துக்கு அமைய வேலை செய்வது முக்கிய அம்சமாக கவனிக்கப்படும். கட்சியின் தலைவர் இந்த பதவிக்காக தனது வேட்பாளரை குறிப்பிட்ட கால அவகாசம் கேட்டததால் பிரதி தலைவர் பதவியை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இவ்வருடம் நடைபெறவுள்ள மத்திய மாகாண தேர்தலுக்கான பிரசார அணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, கபிர் ஹாசிம், தயா கமகே ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். அத்துடன், வடமேல் மாகாண தேர்தலுக்கான பிரசார அணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா,ரவி கருணாநாயக்க, மங்கள் சமரவீர, ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் அந்த பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.