புதன், ஜனவரி 30, 2013

ஜனாதிபதிக்கு நல்ல மூளையை கொடுக்க நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: அசாத்சாலி

எதிர்வரும் சுதந்திர தினமான 4 ஆம் திகதியன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்ல மூளையை கொடுக்க வேண்டும் என அனைத்து இன மக்களும் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என முன்னாள் கொழும்பு மாநகரசபை பிரதி மேயர் அசாத்சாலி தெரிவித்தார். கொழும்பில் இன்று, அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்தவும் என்ற இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கஞ்சா, ஹெரோயின் வியாபாரம் செய்பவர்களே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். எனவே அனைத்து மக்களும் வீதிக்கு இறங்கி இந்த அரசாங்கத்தை அடித்து விரட்ட வேண்டும். தற்போது பிரதியமைச்சராக உள்ளவர் ஒருவர் அண்மையில் 4 அரை கிலோ கஞ்சாவுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் விருந்தினரை போன்று மரியாதை செலுத்தி 150 கிரேம் கஞ்சாவே இருந்தது என கூறி எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காது விடுதலை செய்யப்பட்டார். ஜனாதிபதி தமிழ் முஸ்லிம் மக்களை ஒன்றுசேர்க்க வேண்டும் என கூறிக்கொண்டு அவரே அனைத்து இன மக்களையும் பிரித்து வைக்க முயற்சி செய்கின்றார். எனவே நாட்டு மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து அடித்து விரட்ட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.