நீதிமன்றம் இன்று போராட்ட களமாக மாறிவிட்டது - மஹிந்த ஆவேசம்
குற்றப் பிரேரணை விடயத்தில் அரசியல் யாப்பிற்கு உட்பட்டே செயற்பட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்களுக்கு பல சவால்கள் வருவதாகவும் அவ்வாறான ஒரு சவால் நேற்றைய தினம் முற்றுப் பெற்றதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் இலங்கைக்கு எதிராக தற்போதும் பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். நீதிமன்றத்தின் சுயாதீனத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனால் நீதிமன்றம் என்ற புனித பூமியை பாதுகாக்க முன்வருமாறும் அதற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற போதும் இன்று நீதிமன்ற வளாகம் ஆர்ப்பாட்ட சுற்றுவட்டமாக மாறிவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு சுகததாஸ விளையாட்டு அரங்கில் 52 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இந்த கருத்துக்களை குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.