ராய்ட்டர் செய்தியாளரிடம் இருந்து புலிகள் தொடர்பான விபரங்களை கறந்த அமெரிக்கா
1994ம் ஆண்டு ஜூன் 17ம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவராலயம் தனது தலைமைக்கு பாதுகாப்பான கேபிள் மூலம் புலிகள் தொடர்பாக பல தகவகல்களை அனுப்பியுள்ளது. இத் தகவல்கள் சிலவற்றை தற்போது விக்கி லீக்ஸ் இணையம் வெளியிட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட ஆண்டில் யாழ்ப்பாணத்துக்குச் சென்ற ராய்ட்டர் செய்திச் சேவை மற்றும் BBC நிருபர்கள், கொழும்பு திரும்பியவுடன் அமெரிக்க தூதரைச் சந்தித்து பல தகவல்களை பரிமாறியுள்ளார்கள். யாழில் புலிகள் சிவில் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் பல பராமரிப்புகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். உலக அங்கிகாரம் அற்ற ஒரு தனி நாட்டை அவர்கள் வைத்திருப்பது போன்ற தோற்றப்பாடு இருப்பதாகத் தெரிவித்துள்ள நிருபர்கள், யாழில் சுங்கவரி திணைக்களம், நீதிமன்றங்கள், மற்றும் பொலிஸ் பிரிவு என்பன புலிகளால் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள். யாழில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால், பல வணிகஸ் தலங்களுக்கு புலிகளே மின்சாரத்தை வழங்குவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். யாழில் விடுதலைப் புலிகளுக்கும் அவர்கள் நிர்வாகத் திறமைக்கும் மிகுந்த ஆதரவு மக்கள் மத்தியில் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவ்விரு நிருபர்களும் தமிழீழ வைப்பகம் தொடர்பாகவும் கருத்து தெரிவித்துள்ளார்கள். புலிகளால் திறக்கப்பட்டு வங்கிகள், ஏழை விவசாயிகளுகு கடன் வழங்கியுள்ளது என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்கள். புலிகள் யாழில் இருந்தவாறு பாரிய தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் பாரிய பதுங்கு குழிகளை வெட்டிவருவதாகவும், அமெரிக்க தூதுவரிடம் நிருபர்கள் தெரிவித்துள்ளார்கள். தாம் அன்ரன் பாலசிங்கம் அவர்களைச் சந்தித்ததாகவும், அவர் எரித்திரியா சுதந்திரம் பெற்றது போல தமிழீழமும் ஒரு நாள் சுதந்திரம் அடையும் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ள நிருபர்கள், புலிகள் தனித் தமிழீழம் வேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் செயல்பட்டு வருவதோடு, ஒரு பிரிந்துசெல்லும் நாடு தன்னிறைவடைய எது தேவையோ அதனைச் செய்துவருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இத் தகவல்களை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது தலைமைக்கு அனுப்பிவைத்துள்ளது. இச் செய்திகளே தற்போது விக்கி லீக்ஸ் ஊடாகக் கசிந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.