பேச்சுவார்த்தை மேற்கொள்ள மாற்றுத் திகதியை வழங்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை
பேச்சுவார்த்தை மேற்கொள்ள மாற்றுத் திகதியை வழங்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான மாற்றுத் திகதியை வழங்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது. இந்நிலையிலேயே பேச்சுவார்த்தை தொடர்பில் அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளமையினால் மாற்றுத் திகதியை வழங்குமாறு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் வெற்றியின் செய்தி பிரிவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.