திங்கள், நவம்பர் 12, 2012

இந்தியா ஏன் மௌனம் காக்கிறது: கூட்டமைப்பு

13 ஆவது திருத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்குள் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளன இவ்வாறான நிலையில், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா மௌனம் காப்பது ஏன் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. நாடளுமன்றத்தில் வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் எம்.பியான ஈ.சரவணபவன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த தேசிய விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு இந்தியா தீவிரமாக தலையிட வேண்டும். இந்த விவகாரத்தை இந்தியா கையாளுகின்ற விதமானது எமது கட்சிக்கு சந்தேகமளிக்கிறது. 13 ஆவது திருத்தம் இந்தியாவின் குழந்தை ஆதலால் அதனை நீக்க வேண்டாம் என இலங்கையை இந்திய அறிவுறுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.