புதன், நவம்பர் 21, 2012

கனடா பாராளுமன்றத்தில் மீண்டும் ஓங்கி எதிரொலித்த சிறீலங்கா விவகாரம்:

News Serviceபிக்கறிங்-ஸ்காபரோ கிழக்கு தொகுதி கனடிய ஆளும் கன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கொர்நேலீ ச்சிசு" நவம்பர் 19ஆம் நாள் திங்கட்கிழமை ஐ.நா அறிக்கையை சிறீலங்கா மனித உரிமைகள் நிலைமை மற்றும் கனடாவின் காட்டமான நிலைப்பாடு குறித்து வெளியிட்ட கருத்துக்களைத் தொடர்ந்து 20ஆம் நாள் செவ்வாய்கிழமை கேள்வி நேரத்தின் போது எதிர்கட்சியான புதிய சனநாயகக்கட்சியின் ஸ்காபுரோ ருச்ரிவர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபையீசன் மற்றும் கமல்டன் கிழக்கு ஸ்ரோனிகிரீக் பாராளுமன்ற உறுப்பினர் வெயின் மார்சன் ஆகியோர் சிறீலங்கா குறித்து கேள்விகளை எழுப்பினர். அவற்றிக்கு பதிலளித்த கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட் அவர்கள் சிறீலங்கா விடயத்தில் கனடிய அரசு போன்று எந்தவொரு அரசும் தொழிற்பட்டதில்லை என்றார். தமிழ் மக்கள் உட்பட சிறீலங்காவில் உள்ள மக்களின் நலன் மனித உரிமைகள் குறித்து தொடர்ந்தும் குரலெழுப்பி வருவமை நினைவு கூர்ந்த அவர் சிறீலங்கா விடயத்தில் கனடாவே இறுக்கமாகவும் முதன்மையாவும் நடந்து கொள்வதையும் தொடர்ந்தும் செய்யும் என மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.