அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட மாதகல் மேற்கு மக்கள் இலங்கை கடற்படையின் தடைகளால் அல்லாடுகின்றனார்கள். யாழில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் மாதகலும் உள்ளடங்குகிறது. மாதகல் மேற்கு மக்கள் கடந்த பலந வருடங்களாக தமது குடிநிலத்தை கோரி வந்தார்கள். மக்கள் அகதிமுகாங்களிலும் உறவினர் வீடுகளிலும் வசித்து வந்தார்கள். இந்நிலையில் அண்மையில் குறித்த பகுதி விடுவிக்கப்படுவதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் முரளிதரன் அறிவித்தையடுத்து அப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். 22 வருடங்களின் பின்னர் இந்த மக்கள் மீள்குடியேற இலங்கை கடற்படையினர் அனுமதித்தனர். 269 குடும்பங்கள் யுத்தத்திற்கு முன்பு இங்கு வசித்துள்ள போதும் தற்பொழுது 229 குடும்பங்களே மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு எந்த உதவிகளும் இதுவரையில் வழங்கப்படவில்லை. இவர்கள் 22 வருடங்களாக பற்றை மண்டிய தமது குடிநிலத்தை துப்புரவாக்கி வருகின்றனர். மாதகல் மேற்களில் குடியேறிய மக்களை அங்குள்ள விகாரை பபக்கத்தில் நடமாடக் கூடாது என்று கடற்படையினர் தடைவிதித்துள்ளனர். இந்தியாவில் இருந்து சங்கமித்திரை வந்தாக கூறப்படும் குறித்த விகாரை மாதகல் மேற்கு கடற்கரை வீதியில் அமைந்துள்ளது. இந்த விகாரையின் அருகில் மக்களின் குடிநிலங்களும் வணக்கத்தலங்களும் உள்ளன. இப்பகுதியில் நடமாடக்கூடாதென கடற்படை கூறியுள்ளது. அத்தோடு இப்பகுதியில் அமைந்துள்ள நுணசை மகா வித்தியலாயத்தையும் அப்பகுதியில் 15 வீடுகளையும் கடற்படையினர் இன்னும் விடுவிக்கவில்லை. அப்பகுதி தொடர்ந்து கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. விகாரையை அண்டிய இடங்களில் மக்களை நடமாடத் தடைசெய்த கடற்படையினர் அப்பகுதியில் மக்கள் மீள்பிடிக்க முடியாது என்றும் தடை விதித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.