'அழிவு யுத்தத்திற்கு வித்திட்டதுடன், எமது மக்களை கையேந்த வைத்தவர்கள் கடந்தகால அரசியல் தலைவர்களே' என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாண பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை அமைச்சர் தலைமையில் இடம்பெற்றஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின் கீழும் அமைக்கப்பட்சிவிபாதுகாப்புக் குழுவில் அந்தந்தப் பகுதி கிராம சேவையாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும். வாழ்வாதார மேம்பாட்டுக்கான உள்ளீடுகளை வழங்குவது மட்டுமன்றி அவற்றினது பயன்பாடுகள், பெறுபேறுகள் தொடர்பிலும் துறைசார்ந்தவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.கடந்த கால அரசியல் தலைமைகள் விட்ட தவறுகளினாலேயே எமது மக்கள் அழிவு யுத்தத்திற்குமுகம் கொடுத்ததுடன் கையேந்தும் நிலைமைக்கும் உள்ளாகினர். அந்த நிலையை மாற்றியமைப்பதற்கு எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.