வெள்ளி, செப்டம்பர் 28, 2012

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களை பெறுவதற்காக போராடுவோம்: - இரா.சம்பந்தன்

உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் மாகாண சபைகளின் அங்கீகாரம் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் திவிநெகும சட்டமூலத்தை கிழக்கு மாகாண சபையில் சமர்பிக்கும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்கும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள்,; மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று புதன்கிழமை மாலை உரையாற்றுகையில் சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 13ஆவது திருத்த சட்டத்தின் கீழ் மாகாண சபைகளினால் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தி திட்டங்களை மத்திய அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கோள்ளப்படுவதற்கு திவிநெகும சட்டம் அனுமதிக்கின்றது. மாகாண சபைகளுக்கு 13 ஆவது திருத்தத்தின் படி வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களை பெறுவதற்காக போராடுவோம் என்று கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்ட மூலத்தை எதிர்த்து வாக்களிப்பார்களா?" எனவும் சம்பந்தன் கேள்வி எழுப்பினர். கிழக்கு மாகாண சபையின் அங்குரார்ப்பண அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது. மறுநாள் திங்கட்கிழமை திவிநெகும சட்டமூலத்திற்கு சபையில் அங்கீகாரம் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.