நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் உணர்ச்சிகரமான பேச்சில் மயங்கி அவர்களுக்கு வாக்களித்துள்ளதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பட்டுள்ளார்.
இதேவேளை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்பது போல கிழக்கு மாகாணத்தில் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை வழங்க அரசியலமைப்பு திட்டத்தில் இடமுண்டா? என ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுழற்சி முறை முதலமைச்சர் திட்டமானது அபிவிருத்தி வேலைகளை பாதிக்கும் என்பதால் அது பொருத்தமானதல்ல எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
நடைபெற்ற கிழக்கு மாகாணசபைக்கான தேர்தில் தான் முதலமைச்சராக வரவேண்டும் என்ற நோக்கிலேயே போட்டியிட்டதாகவும், தனக்கு 15 ஆயிரம் வாக்குகள் இன்னும் மேலதிகமாக கிடைத்து, தமது கட்சி சார்பில் மூவர் வெற்றி பெற்றிருந்தால் நிச்சியமாக தான்தான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பேன் எனவும் கூறினார்.
அதன் அடிப்படையில் கிழக்கு மாகாண மக்கள் அரசியலைப் புரிந்து கொள்ளவில்லை என தான் கவலையடைவதாகவும், இந்த பின்னடைவை ஒரு தற்காகலிக பின்னடைவாகவே பார்ப்பதாகவும், எதிர்காலத்தில் வெற்றிப்பயணத்தை தொடர்வோம் எனவும் பிள்ளையான் நம்பிக்;கை வெளியிட்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது:-
கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாக அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலும் 3 ஆசனங்களை கைப்பற்றியிருந்தால் அந்த ஆசை நிறைவேறியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முதலமைச்சர் பதவி இல்லாவிட்டாலும், ஜனாதிபதி தனக்கு ஆலோசகர் பதவி ஒன்றை வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளில் முன்னின்று செயற்பட முடியும் எனவும் சந்திரகாந்தன் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் இனவாதத்தை முன்வைத்து போட்டியிட்டதாகவும் எனினும் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து மாகாண சபையின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதால், மாகாண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட போவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் தேர்தலில் தமிழ் மக்கள் குறைவாக வாக்களித்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.